செய்திகள்

அடுத்த 25 ஆண்டுகளில் எரிசக்தி துறையில் இந்தியா முக்கிய சக்தியாக விளங்கும் - பிரதமர் மோடி பேச்சு

டெல்லியில் நடைபெற்ற 16-வது சர்வதேச எரிசக்தி கருத்தரங்கத்தை தொடங்கி வைத்த பிரதமர் மோடி, அடுத்த 25 ஆண்டுகளில் எரிசக்தி துறையில் இந்தியா முக்கிய சக்தியாக விளங்கும் என கூறினார். #IEF16 #modi

மாலை மலர்

டெல்லியில் இன்று நடைபெற்ற 16-வது சர்வதேச எரிசக்தி கருத்தரங்கை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். இன்று தொடங்கி மூன்று நாட்கள் நடைபெறும் இந்த கூட்டத்தில் பல நாடுகளைச் சேர்ந்த எரிசக்தி துறை மந்திரிகள், பல தொழிலதிபர்கள் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் பேசிய நரேந்திர மோடி, 'என் பார்வையில் இந்தியாவின் எரிசக்தி வளர்ச்சியில் நான்கு முக்கிய தூண்கள் உள்ளன. அவை எரிசக்தி திறன், பயன்படுத்துதல், நிலைப்புத்தன்மை மற்றும் எரிசக்தியை பாதுகாத்தல் போன்றவையாகும். நமது அரசாங்கம் மேக் இன் இந்தியா திட்டத்தின் மூலம் இளைஞர்களை ஜவுளி, பெட்ரோகெமிக்கல் மற்றும் பொறியியல் போன்ற தொழில்களை மேம்படுத்தும் முயற்சியில் ஈடுபட வைக்கிறது.