செய்திகள்

பிரதமர் மோடி வருகை அரசியல் மாற்றத்தை உருவாக்கும்: தமிழிசை சவுந்தரராஜன்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தும் என தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.

சென்னை:

சென்னை விமான நிலையத்தில் பிரதமர் மோடியை வரவேற்ற தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அவரிடம் பிரதமர் மோடி தி.மு.க. தலைவர் கருணாநிதியை சந்திப்பது குறித்து கேட்டபோது அதற்கு பதில் அளித்து தமிழிசை சவுந்தரராஜன் கூறுகையில், பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தும் என்றார்.