சத்தீஸ்கர், ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு விரைவில் தேர்தல் நடைபெறவுள்ளது.
மேலும், பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு மட்டுமே உள்ளது.
இந்நிலையில், ஏழை மக்களுக்கான நலத்திட்டங்கள் தொடர்பாக ஆய்வு செய்வதற்காகவும், விவசாயிகள், தலித்துகள், பழங்குடியினர், இளைஞர்கள், மகளிர்களுக்கான மத்திய - மாநில அரசுகளின் நலத்திட்டங்கள் விரிவான வகையில் பயனாளிகளை சென்றடவது தொடர்பாக ஆலோசனை செய்வதற்காக பா.ஜ.க.வின் ஆட்சி நடைபெறும் மாநிலங்களை சேர்ந்த முதல் மந்திரிகள் மற்றும் அவற்றின் சில மாநிலங்களின் துணை முதல் மந்திரிகள் பங்கேற்ற கூட்டம் இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது.
பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் பா.ஜ.க. தேசிய தலைவர் அமித் ஷாவும் பங்கேற்றார். பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக மாநில முதல் மந்திரிகள், துணை முதல் மந்திரிகளுக்கு பிரதமர் அறிவுரை வழங்கியதாக தெரிகிறது.