செய்திகள்

ஜனாதிபதி தேர்தல்: பேனா கொண்டு செல்ல எம்.பி., எம்.எல்.ஏ. க்களுக்கு தடை

நாளை நடைபெறும் ஜனாதிபதி தேர்தலில் வாக்காளர்கள் தங்கள் பேனாக்களை, வாக்களிக்கும் இடத்துக்கு கொண்டு செல்ல தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.

மாலை மலர்

டெல்லி:

இந்திய ஜனாதிபதி தேர்தல் நாளை நடைபெற உள்ளது. இதுவரை நடைபெற்ற தேர்தல்களில் வாக்களிக்க அழியாத மை பயன்படுத்தப்பட்டு வந்தது. நாளை நடைபெறும் ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்க அழியாத மைக்கு பதிலாத மார்க்கர் பெனா பயன்படுத்தும் முறை அறிமுகப்படுத்தப்பட உள்ளது. 

இந்நிலையில், நாளை நடைபெரும் ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்க செல்லும் போது எம்.பி., மற்றும் எம்.எல்.ஏ. க்கள், தேர்தல் அலுவலர்களிடம் தங்களது பேனாக்களை ஒப்படைத்துவிட்டு வாக்களிப்பதற்காக சிறப்பாக தயாரிக்கப்பட்டுள்ள மார்க்கர் பேனாவை கொண்டு செல்ல வேண்டும். வாக்களித்து திரும்பும்போது மார்க்கர் பேனாவை ஒப்படைத்துவிட்டு தங்கள் பேனாக்களை பெற்று செல்லலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.