செய்திகள்

குடியரசு தலைவர் தேர்தல்: ஸ்டாலினை சந்தித்து ஆதரவு கோரினார் மீரா குமார்

குடியரசு தலைவர் தேர்தலில், எதிர்க்கட்சி வேட்பாளர் மீரா குமார் சென்னையில் தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து ஆதரவு கோரினார்.

ஜனாதிபதி தேர்தலில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் ராம் நாத் கோவிந்த், எதிர்க்கட்சிகள் சார்பில் போட்டியிடும் முன்னாள் சபாநாயகர் மீரா குமார் ஆகியோர் அரசியல் கட்சி தலைவர்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகின்றனர்.

அவ்வகையில், தி.மு.க. மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எம்.பி.க்களை சந்தித்து ஆதரவு கேட்பதற்காக மீரா குமார் இன்று மாலை சென்னை வந்தார். சென்னை விமான நிலையத்தில் அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

SCROLL FOR NEXT