சென்னை:
சென்னை பல்கலைக்கழகத்தின் 160-வது பட்டமளிப்பு விழா வருகிற 5-ந்தேதி (சனிக்கிழமை) நடைபெறுகிறது.
காலை 10.30 மணிமுதல் 11.30 மணிவரை இந்த நிகழ்ச்சி நடக்கிறது.
இந்த பட்டமளிப்பு விழாவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பட்டங்களை வழங்குகிறார். இதற்காக அவர் 5-ந்தேதி சென்னை வருகிறார்.
பல்கலைக்கழக வேந்தரான பன்வாரிலால் புரோகித், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, உயர்கல்வி துறை அமைச்சர், இணை வேந்தரான கே.பி. அன்பழகன் உள்ளிட்டோர் பங்கேற்கிறார்கள்.