சென்னை ஐகோர்ட் 
செய்திகள்

சென்னை ஐகோர்ட்டுக்கு 6 நீதிபதிகள் நியமனம் - ஜனாதிபதி உத்தரவு

சென்னை ஐகோர்ட்டுக்கு கூடுதல் நீதிபதிகள் 6 பேரை நிரந்தர நீதிபதிகளாக நியமனம் செய்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

 புதுடெல்லி:

சென்னை ஐகோர்ட்டில் ராமதிலகம், தாரணி, ராஜமாணிக்கம், கிருஷ்ணவள்ளி, பொங்கியப்பன், ஹேமலதா ஆகியோர் கூடுதல் நீதிபதிகளாக இருந்து வருகின்றனர். அவர்களை நிரந்தர நீதிபதிகளாக நியமனம் செய்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உத்தரவு பிறப்பித்துள்ளார். 

தற்போது சென்னை ஐகோர்ட் நீதிபதிகளின் எண்ணிக்கை 58 ஆக உயர்ந்துள்ளது. இன்னும் 17 இடங்கள் காலியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT