செய்திகள்

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் 2 நாள் பயணமாக இன்று குஜராத் செல்கிறார்

நாட்டின் 14-வது ஜனாதிபதியான ராம்நாத் கோவிந்த் இரண்டு நாள் அரசு முறை பயணமாக இன்று குஜராத் மாநிலத்திற்கு செல்கிறார்.

மாலை மலர்

புதுடெல்லி:

நாட்டின் 14-வது ஜனாதிபதியான ராம்நாத் கோவிந்த் ஜூலை மாதம் 25-ந்தேதி பதவி ஏற்றுக்கொண்டார். ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் இன்று முதன் முறையாக இரண்டு நாள் பயணமாக இன்று, குஜராத் மாநிலம் செல்கிறார்.

முதல்நாள் பயணத்தின் போது அகமதாபாத்தில் உள்ள சபர்மதி ஆசிரமத்திற்கு செல்கிறார். அதன் பின்னர் மெஹ்சானாவில் உள்ள ஜீன கோவிலான சிமந்தர் சுவாமி கோயிலுக்கு சென்று அங்கு நடைபெரும் விழாவில் கலந்து கொள்கிறார்.

இரண்டாம்நாள் பயணத்தின் போது ராஜ்கோட் மாவட்டத்தின் ஜஸ்தனில் நடைபெரும் நிகழ்ச்சியில் சாவுனி நீர் பாசன இணைப்பு திட்டத்திற்கான அடிக்கல் நாட்டி வைத்து அங்கு நடைபெரும் கூட்டத்தில் பொதுமக்களிடையே பேசுகிறார். அதன் பின்னர், ஜஸ்தனில் உள்ள கேளா சோம்நாத் கோவிலுக்கு செல்கிறார்.

அதைத்தொடர்ந்து, இரண்டுநாள் பயணத்தை முடித்துக்கொண்டு டெல்லி திரும்புகிறார். இந்த பயணத்தின் போது, குஜராத் மாநில ஆளுநர் ஓ.பி.கோலி, முதல்வர் விஜய் ரூமானி, துணைமுதல்வர் நிதின் பட்டேல் ஆகியோர் ஜனாதிபதியுடன் செல்கின்றனர் என அரசு தரப்பில் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.