சுவிட்சர்லாந்தில் மகாத்மா காந்தி சிலை 
செய்திகள்

சுவிட்சர்லாந்தில் மகாத்மா காந்தியின் சிலை - ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் திறந்து வைத்தார்

அரசுமுறை பயணமாக சுவிட்சர்லாந்து நாட்டுக்கு சென்றுள்ள ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று மகாத்மா காந்தியின் சிலையை திறந்து வைத்தார்.

மாலை மலர்

ஐஸ்லாந்து, சுவிட்சர்லாந்து, ஸ்லோவேனியா ஆகிய  3 நாடுகளில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், தனது மனைவி மற்றும் அரசு உயரதிகாரிகளுடன் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

இந்த பயணத்தின் இரண்டாம்கட்டமாக சுவிட்சர்லாந்து நாட்டுக்கு சென்றுள்ள ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அங்குள்ள வில்லினூவ் நகராட்சிக்கு உட்பட்ட பூங்காவில் இன்று மகாத்மா காந்தியின் மார்பளவு சிலையை திறந்து வைத்தார்.

சிலை திறப்பு விழாவில் பேசிய  ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், ஜெனிவா ஆற்றங்கரையில் இந்த சிலையை அமைக்க அனுமதி அளித்து அந்த இடத்துக்கு காந்தி சதுக்கம் என்ற பெயரை சூட்டியுள்ள சுவிட்சர்லாந்து அரசுக்கு நன்றி தெரிவித்தார்.

இலக்கியத்துக்கான  நோபல் பரிசு பெற்ற ரோமைன் ரோலான்டின் அழைப்பயேற்ற்ய் கடந்த 1931-ம் ஆண்டில் மகாத்மா காந்தி வில்லினூவ் நகருக்கு முன்னர் வந்து சென்றதை நினைவுகூர்ந்த அவர், ஒருமைப்பாடு மற்றும் மனிதநேயத்தின் மீது மகாத்மா காந்தி மட்டற்ற நம்பிக்கை கொண்டிருந்தார் என குறிப்பிட்டார்.