செய்திகள்

பதவி ஏற்புக்கு பின்னர் முதல் பயணம்: ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அக்.4-ம் தேதி எத்தியோப்பியா செல்கிறார்

இந்தியாவின் ஜனாதிபாதியாக பதவி ஏற்றுகொண்ட ராம்நாத் கோவிந்த் முதல் வெளிநாட்டு பயணமாக வரும் அக்டோபர் 4-ம் தேதி ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான எத்தியோப்பியா செல்கிறார்.

மாலை மலர்

புதுடெல்லி:

ஆப்பிரிக்க யூனியன் நாடுகளின் தலைமைபீடமாக திகழும் ஆப்பிரிக்க நாடுகளில் இந்தியர்கள் பூர்வீகமாக வாழ்ந்து வருகின்றனர். குறிப்பாக, ஆப்பிரிக்க யூனியன் நாடுகளின் தலைமைபீடமாக திகழும் எத்தியோப்பா நாட்டின் தலைநகரான அடிஸ் அபாபா நகரில் 500-க்கும் அதிகமான இந்திய நிறுவனங்கள் உள்ளன.

உலகின் பல பகுதிகளில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டி வரும் சீனா ஆப்பிரிக்காவில் உள்ள ட்ஜிபோட்டி நகரில் புதிதாக ராணுவ முகாம் ஒன்றை அமைத்துள்ளது.

எத்தியோப்பியா நாட்டுக்கு ஜனாதிபாதி ராம்நாத் கோவிந்த் வரும் 4-ம் தேதி புறப்பட்டு செல்கிறார். 6-ம் தேதி வரும் அங்கு தங்கி இருக்கும் அவர் பின்னர் ட்ஜிபோட்டி நகருக்கும் செல்கிறார்.

அவரது பயண திட்டத்தை இன்று உறுதிப்படுத்திய இந்திய வெளியுறவுத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் 45 ஆண்டுகளுக்கு பின்னர் எத்தியோப்பியா நாட்டுக்கு செல்லும் ஜனாதிபாதி ராம்நாத் கோவிந்த், அங்குள்ள இந்திய

சமூகத்தாருடன் சில கலந்துரையாடல் நிகழ்ச்சிகளிலும் பங்கேற்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எத்தியோப்பியா நாட்டில் மூன்று சர்க்கரை ஆலைகள் அமைக்கும் திட்டத்துக்காக இந்ர்ஹியா சுமார் 100 கோடி டாலர்கள் அளவுக்கு நிதியுதவி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.