ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், வங்காளதேச பிரதமர் அப்துல் ஹமீதின் அழைப்பின் பேரில் டிசம்பர் மாதம் 16 மற்றும் 17-ம் தேதிகளில் வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
வங்காளதேசமும் இந்தியாவும் அடுத்த மாதம், இரண்டு மெகா நிகழ்வுகளை - மைத்ரி திவாஸ் (நட்பு தினம்) மற்றும் வங்காளதேசத்தின் வெற்றி நாள் - முறையே டிசம்பர் 6 மற்றும் டிசம்பர் 16 ஆகிய தேதிகளில் நடத்துகின்றன.
வங்காளதேசமும் இந்தியாவும் இணைந்து டிசம்பர் 6 ஆம் தேதி மைத்ரி திவாஸைக் குறிக்கும் வகையில் லோகோ வடிவமைப்பு போட்டியை நடத்துகின்றன. இதைத்தவிர, பல்வேறு முக்கிய நிகழ்வுகளிலும் ஜனாதிபதி பங்கேற்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்.. உடல் உறுப்புகளை தானமாக பெறுவதற்கு ‘ஆதார்’ கட்டாயம்- தமிழக அரசு உத்தரவு