செய்திகள்

லண்டனில் பயங்கரவாதிகள் தாக்குதல்: ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, சோனியா காந்தி கண்டனம்

இங்கிலாந்து தலைநகர் லண்டனில் நேற்று பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 7 பேர் பலி ஆனார்கள். இந்த தாக்குதல் சம்பவத்துக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, சோனியா காந்தி கண்டனம் தெரிவித்து உள்ளனர்.

இங்கிலாந்து தலைநகர் லண்டனில் நேற்று பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 7 பேர் பலி ஆனார்கள். இந்த தாக்குதல் சம்பவத்துக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார். இதுகுறித்து ‘டுவிட்டர்’ வலைத்தள பக்கத்தில் எழுதியுள்ள அவர், இந்த தாக்குதலில் உயிர் இழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துக்கொள்வதாகவும், காயம் அடைந்தவர்கள் விரைவில் குணம் அடைய வாழ்த்துவதாகவும் கூறி உள்ளார்.

இதேபோல் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் கண்டனம் தெரிவித்து இருக்கிறார். லண்டன் தாக்குதல் சம்பவத்தில் உயிர் இழந்த அப்பாவிகளின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ள அவர், காயம் அடைந்தவர்கள் விரையில் குணம் அடைய பிரார்த்தனை செய்யவதாக கூறி இருக்கிறார்.