செய்திகள்

பிரிமீயர் லீக்: மான்செஸ்டர் சிட்டி தொடர்ந்து 18-வது வெற்றியை பெற்று அசத்தல்

பிரிமீயர் லீக் கால்பந்து தொடரில் மான்செஸ்டர் சிட்டி இன்றைய வெற்றியின் மூலம் தொடர்ச்சியாக 18 வெற்றிகளை ருசித்துள்ளது.

மாலை மலர்
பிரிமீயர் லீக் கால்பந்து தொடரில் மான்செஸ்டர் சிட்டி அணி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. இந்த சீசினில் 17 வெற்றிகளை தொடர்ச்சியாக பெற்ற மான்செஸ்டர் சிட்டி, இன்றைய ஆட்டத்தில் நியூகேஸ்டல் அணியை எதிர்கொண்டது.



ஆட்டத்தின் 31-வது நிமிடத்தில் ரஹீம் ஸ்டெர்லிங் ஒரு கோல் அடித்தார். அதன்பின் இரு அணி வீரர்களும் கோல் அடிக்காததால் மான்செஸ்டர் சிட்டி 1-0 என வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் மான்செஸ்டர் சிட்டி தொடர்ச்சியாக 18 வெற்றிகளை பெற்று சாதனைப் படைத்துள்ளது.