20 போட்டிகளில் முடிவில் 18 தொடர் வெற்றிகளுடன் வீறுநடை போட்ட மான்செஸ்டர் சிட்டி இன்று இந்த வருடத்தின் கடைசி போட்டியில் கிரிஸ்டல் பேலஸ் அணியை எதிர்கொண்டது. இந்த போட்டியில் வெற்றி பெற்று 19 தொடர் வெற்றிகளை பெற்ற அணி என்ற வரலாற்றுச் சாதனையை பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் கிரிஸ்டல் பேலஸ் அணி மான்செஸ்டர் சவாலுக்கு கடும் நெருக்கடி கொடுத்தது. இதனால் 90 நிமிடங்கள் வரை மான்செஸ்டர் அணியால் கோல் அடிக்க முடியவில்லை. காயம் மற்றும் விளையாட்டு தடை ஆகியவற்றை கணக்கிட்டு கூடுதல் நேரம் வழங்கப்பட்டது. அப்போது 92-வது நிமிடத்தில் கிரிஸ்டல் பேலஸ் அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது.
இந்த வாய்ப்பை பயன்படுத்தி மான்செஸ்டருக்கு கிரிஸ்டல் பேலஸ் அதிர்ச்சி அளிக்கும் என்று எதிரபார்க்கப்பட்டது. ஆனால், கிரிஸ்டல் பேலஸ் அணியின் மிலிவோஜோவிக் அந்த வாய்ப்பை தவறவிட்டார்.