செய்திகள்

முழங்கால் காயத்தால் மான்செஸ்டர் சிட்டி வீரர் செர்ஜியோ அக்யூரோ 2 வாரம் ஓய்வு

முழங்கால் காயத்தால் மான்செஸ்டர் சிட்டி அணியின் முன்னணி ஸ்டிரைக்கர் செர்ஜியோ அக்யூரோ 2 வாரம் விளையாடமாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. #EPL #ManCity

மாலை மலர்

இவர் நேற்று பயிற்சியில் ஈடுபட்டு கொண்டிருக்குபோது முழங்காலில் வலி இருப்பதாக உணர்ந்தார். இதனால் கிளப் டாக்டர் காயம் குறித்து பரிசோதித்தார். அப்போது இரண்டு வாரங்கள் ஓய்வு எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. இதனால் காயம் முழுவதுமாக குணமடைய தற்போது ஓய்வு எடுத்து வருகிறார்.

இன்று நடைபெறும் ஸ்டோக் அணிக்கெதிரான ஆட்டத்தில் அக்யூரோ பங்கேற்கமாட்டார் என்று கூறப்பட்டுள்ளது. அதேவேளையில் மார்ச் 31-ந்தேதி எவர்டன் அணிக்கெதிராக பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.