செய்திகள்

கூடக்கோவில் அருகே கர்ப்பிணி பெண் தீக்குளித்து தற்கொலை

கர்ப்பிணி பெண் தீக்குளித்து தற்கொலை செய்தார். அவர் ஏன் தற்கொலை செய்தார்? என்பது குறித்து கூடக்கோவில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாலை மலர்

பேரையூர்:

திருமங்கலம் அருகே உள்ள கூடக்கோவில் போலீஸ் சரகத்திற்குட்பட்ட சின்ன உலகாணியை சேர்ந்தவர் கண்ணன், விவசாய கூலி தொழிலாளி.

இவருடைய மனைவி கனி (வயது24). இவர்களுக்கு திருமணமாகி 3 மாதம் ஆகிறது. கனி 2 மாதம் கர்ப்பிணியாக இருந்தார்.

கடந்த 14-ந்தேதி வீட்டில் இருந்த கனி, தனது உடலில் மண்எண்ணை ஊற்றி தீ வைத்து கொண்டார். உடல் கருகிய அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி இன்று அதிகாலை கனி பரிதாபமாக இறந்தார். அவர் ஏன் தற்கொலை செய்தார்? என்பது குறித்து கூடக்கோவில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கோட்டாட்சியர் விசாரணையும் நடக்கிறது.