செய்திகள்

மதுரவாயலில் கர்ப்பிணி பெண் தற்கொலை

மதுரவாயலில் கர்ப்பிணி பெண் மின்விசிறியில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாலை மலர்

போரூர்:

மதுரவாயல் சக்கரபாணி நகரை சேர்ந்தவர் கிரீஷ். இவரது மனைவி ரீனா (வயது 40). இவர்களுக்கு திருமணம் ஆகி 13 ஆண்டுகள் ஆகிறது. குழந்தை இல்லாததால் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தனர்.

இதில் ரீனா 3 முறை கர்ப்பமானார். எனினும் குழந்தை கரு கலைந்தது. தற்போது 4-வது முறையாக அவர் கர்ப்பமாகி இருந்தார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு சிகிச்சைக்காக சென்றிருந்த போது குழந்தை கருவிலேயே இறந்து இருப்பது தெரிந்தது.

குழந்தையின் கருவை அறுவை சிகிச்சை மூலம் அகற்ற வேண்டும் என்று டாக்டர்கள் தெரிவித்தனர். இதனால் ரீனா மனவேதனை அடைந்தார். அவருக்கு கணவர் ஆறுதல் கூறி வந்தார்.

இந்த நிலையில் மனவேதனையில் இருந்த ரீனா வீட்டில் உள்ள மின்விசியில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை கண்டு கணவர் அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து மதுரவாயல் போலீசார் விசாரித்து வருகிறார்கள். #tamilnews