கோவை:
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை சேர்ந்தவர் செல்வி (வயது 25). நிறைமாத கர்ப்பிணி. இவர் கோவை கிணத்துக்கடவு அருகே சிக்கலாம் பாளையம் பகுதியில் உள்ள தனது வீட்டில் தங்கியிருந்தார்.
கடந்த சில நாட்களாக காய்ச்சலால் பாதிக்கப்பட்ட செல்வி, பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். இதில் மருத்துவ பரிசோதனையில் செல்விக்கு பன்றி காய்ச்சல் இருப்பது தெரிய வந்தது.
இந்த நிலையில் தனி வார்டில் சிகிச்சை பெற்று வந்த செல்வி, பலனின்றி நேற்று பரிதாபமாக இறந்தார். வயிற்றில் இருந்த குழந்தையும் இறந்து போனது.
கோவை மாவட்டத்தில் பன்றி காய்ச்சலை கட்டுப்படுத்த சுகாதாரத் துறை அதிகாரிகள் தீவிர நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்கள்.