செய்திகள்

மின்சார திருட்டை தடுக்க பிரீபெய்டு மீட்டர்கள் - உ.பி அரசு அதிரடி திட்டம்

மின்சார திருட்டை தடுப்பதற்காக 13 மாவட்டங்களில் பிரீபெய்டு மீட்டர்களை பொருத்த உத்தரப்பிரதேசம் மாநில அரசு திட்டமிட்டுள்ளது. #Prepaidelectricitymeters #uppcl #powertheft

லக்னோ:

உத்தரப்பிரதேசம் மாநில அரசு, ’அனைவருக்கும் மின்சாரம்’ என்ற திட்டத்திற்கு மத்திய மின்சார துறை அமைச்சகத்துடன் கடந்த 2017-ம் ஆண்டு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. இதன் மூலம் இந்த ஆண்டு இறுதிக்குள் அம்மாநிலத்துக்கு உட்பட்ட கிராம பகுதிகளில் சுமார் 4 கோடி வீடுகளுக்கு மின்சாரம் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

அனைவருக்கும் மின்சாரம் வழங்குவதில் இரண்டு விதமான பிரச்சனைகளை எதிர்கொள்வதாகவும், கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் மட்டுமே 15 சதவீத மின்சாரம் திருடப்பட்டுள்ளதாகவும்  உத்தரப்பிரதேச மின்வாரியத்துறை அதிகாரி கூறியுள்ளார்.

இந்நிலையில், மின்சார திருட்டை தடுப்பதற்காக, பிரீபெய்டு மீட்டர்கள் என்ற புதிய திட்டத்தினை உ.பி அரசு அறிவித்துள்ளது. அதிக அளவில் மின்சாரம் திருடப்படும் 13 மாவட்டங்களில் முதற்கட்டமாக சுமார் ஒரு கோடி பிரீபெய்டு மீட்டர்கள் பொருத்தப்பட உள்ளதாக மின்வாரியத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார். #Prepaidelectricitymeters #uppcl #powertheft

SCROLL FOR NEXT