செய்திகள்

நக்சல் பாதித்த பகுதிகளில் இலவச செட்-டாப் பாக்ஸ் வழங்க பிரசார் பாரதி நிறுவனம் திட்டம்

நக்சலைட்டுகள் தாக்குதல் நடைவடிக்கைகளால் பாதிப்படைந்த பகுதிகளில் வசிக்கும் சுமார் 10 லட்சம் பயனாளிகளுக்கு இலவச செட்-டாப் பாக்ஸ்கள் வழங்க பிரசார் பாரதி நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

புதுடெல்லி:

பீகார், ஜார்கண்ட், சத்திஸ்கர் உட்பட சுமார் 8 வடகிழக்கு மாநிலங்கள் நக்சல்களின் திவிரவாத நடவடிக்கைகளால் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளன. நக்சல்கள் பாதித்த பகுதிகளில் எந்தவித ஊடக வசதியும் இல்லாததால் அப்பகுதிகளில் வாழும் மக்கள் வெளியுலக நடப்புகளை அறிந்து கொள்ளமுடியாமல் பாதிப்படைந்துள்ளனர்.

இந்நிலையில்,மத்திய அரசுக்கு சொந்தமான பிரசார் பாரதி என்னும் பொது ஒளிபரப்பு நிறுவனம் நக்சல்கள் நடவடிக்கைகளால் பாதிப்படைந்த பகுதிகளில் உள்ள சுமார் பத்து லட்சம் பயனாளிகளுக்கு இலவசமாக செட்-டாப் பாக்ஸ்கள் வழங்க திட்டமிட்டிருப்பதாக மூத்த தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சக அதிகாரி தெரிவித்துள்ளார். இதன் மூலம், அப்பகுதிகளில் வாழும் மக்கள் 100 சேனல்கள் வரை இலவசமாக பார்க்கமுடியும்.

சமிபத்தில் ராய்ப்பூரில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை மந்திரி வெங்கையா நாயுடு ”நக்சல்களால் பாதிக்கப்பட்ட மற்றும் தொலைதூரப் பகுதிகள் வாழும் மக்கள் இது போன்ற திட்டங்களின் மூலம் அரசு மேற்கொற்கொண்டுவரும் வளர்ச்சி திட்டங்கள் குறித்து அறிந்து கொள்ள முடியும்”, என்றார். மேலும் மத்திய அரசு சார்பில் சட்டிஸ்கரின் தொலைதூர பகுதிகளில் உள்ள 10000 குடும்பங்களுக்கு இலவசமாக செட்-டாப் பாக்ஸ் வழங்கப்பட இருப்பதாகவும் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT