செய்திகள்

மோடியின் 3 ஆண்டுகால ஆட்சி மக்களுக்கு எதிரானது- பிரகாஷ்காரத் பேச்சு

பிரதமர் மோடியின் 3 ஆண்டுகால ஆட்சி மக்களுக்கு எதிராக உள்ளது என்று தூத்துக்குடியில் நடந்த மாநாட்டில் பிரகாஷ்காரத் பேசினார். #PrakashKarat #pmmodi

மாலை மலர்

தூத்துக்குடி:

மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் 22-வது மாநில மாநாடு தூத்துக்குடியில் இன்று தொடங்கியது. இந்த மாநாடு 4 நாட்கள் நடக்கிறது. மாநாட்டிற்கு மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம்யெச்சூரி தலைமை தாங்கினார்.

மாநாட்டில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிரகாஷ்காரத் பேசியதாவது:-

பிரதமர் மோடியின் 3 ஆண்டுகால ஆட்சி மக்களுக்கு எதிராக உள்ளது. அவர் மக்களுக்கு வேலை வழங்குவதில் தோல்வி அடைந்து விட்டார். பஞ்சாப் நே‌ஷனல் வங்கி முறைகேடில் ஈடுபட்ட நபர் பிரதமர் மோடியுடன் வெளிநாடு பயணத்தில் உள்ளார். பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தின் போது மோடி ஊழலுக்கு எதிரானவர் என்பது போல நான் ஊழலில் ஈடுபடமாட்டேன். யாரையும் ஊழல் செய்யவும் விடமாட்டேன் என்று கூறினார். ஆனால் இப்போது அந்த நிலைமை இல்லை.

இவ்வாறு அவர் பேசினார்.

இதில் பிருந்தாகாரத், எம்.பி.க்கள் வரதராஜன், பத்மநாபன், ரெங்கராஜன் மற்றும் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இம்மாட்டில் தமிழக மக்கள் சந்திக்கும் பல்வேறு பிரச்சினைகள் குறித்து விவாதித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகிறது. மாநாடு நிறைவுநாள் அன்று மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி சார்பில் செந்தொண்டர் அணிவகுப்பும், பேரணி, பொதுக்கூட்டமும் நடைபெறுகிறது. இதில் கேரள மாநில முதல்-மந்திரி பிணராய் விஜயன் கலந்து கொள்கிறார். #tamilnews #PrakashKarat #pmmodi