சிட்னி:
ஆஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் நகரில் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் நடந்து வருகின்றன. போட்டியை நடத்தும் ஆஸ்திரேலியா, இந்தியா உள்பட பல்வேறு நாடுகள் கலந்து கொண்டுள்ளன.
இந்நிலையில் இன்று நடந்த ஆண்களுக்கான 105 கிலோ எடைப் பிரிவில் இந்திய வீரர் பர்தீப் சிங் வெள்ளி பதக்கம் வென்றார். ஏற்கனவே, 7 தங்கம், 3 வெள்ளி மற்றும் 3 வெண்கலம் மொத்தம் 13 பதக்கங்களை இந்தியா வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. #CommonwealthGames #CWG18 #CWG2018 #PradeepSingh #GC2018