கூடுதல் பள்ளி கட்டிடத்தை பிரபு எம்.எல்.ஏ. தொடங்கி வைத்த காட்சி. 
செய்திகள்

தியாகதுருகம் அருகே ரூ.15 லட்சத்தில் கூடுதல் பள்ளி கட்டிடம்- பிரபு எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்

தியாகதுருகம் அருகே உள்ள சிறுவல் கிராமத்தில் ரூ.15 லட்சத்தில் கூடுதல் பள்ளி கட்டிடத்தை பிரபு எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

மாலை மலர்

கண்டாச்சிமங்கலம்:

தியாகதுருகம் அருகே உள்ள சிறுவல் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியின் கட்டிடம் பழுதடைந்ததை அடுத்து கூடுதல் கட்டிடம் கட்டித்தர வேண்டும் என அந்த பகுதி மக்கள் பிரபு எம்.எல்.ஏ.விடம் கோரிக்கை வைத்தனர். இதை ஏற்று அவர் கூடுதல் கட்டிடம் கட்டுவதற்கு சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.15 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தார். 

இதையடுத்து கூடுதல் கட்டிடம் கட்டுவதற்கான கட்டுமான பணி தொடக்க விழா நடைபெற்றது. இதற்கு தியாகதுருகம் மேற்கு ஒன்றிய அ.தி. மு.க. செயலாளர் அய்யப்பா தலைமை தாங்கினார். மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் ஜான்பாஷா, ஒன்றிய துணை செயலாளர் ஜெயச்சந்திரன், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளர் ராஜகுரு ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட ஜெயலலிதா பேரவை துணை செயலாளர் சிறுவல் மணிவண்ணன் வரவேற்றார். கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் பிரபு சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு கட்டுமான பணியை தொடங்கி வைத்தார். 

இதில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர்கள் தமிழரசி குமரவேல், குமரவேல், ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர்கள் குமார், நீலாவதி கதிர்வேல், பாலகிருஷ்ணன், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க முன்னாள் இயக்குநர் மணிவண்ணன், கிளை செயலாளர்கள் அழகப்பன், தமிழரசன், பிரபு, மகளிரணி செயலாளர் லட்சுமி, நிர்வாகிகள் இந்திரஜித், முருகன், சக்திவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஊராட்சி மன்ற முன்னாள் துணைத்தலைவர் சந்தோஷ் நன்றி கூறினார்.