நெல்லை:
நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் 1000 மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் 2 அணு உலைகள் செயல்பட்டு வந்தன. இங்கு இந்தியாவிலேயே அதிக பட்சமாக ஒரே இடத்தில் 2 ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது.
இந்த அணுமின் நிலையங்களில் இருந்து தமிழகத்துக்கு 1120 மெகாவாட் மின்சாரம் சப்ளை செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று திடீரென்று 2-வது அணு உலையில் மின்சாரம் தயாரிப்பு பணிகள் நிறுத்தப்பட்டன.
கூலிங் பிரிவில் வால்வ் செயல் இழந்ததால் நிறுத்தப்பட்டதாக தகவல்கள் வெளியானது. ஆனால் இதை உயர் அதிகாரிகள் மறுத்தனர். கூலிங் பிரிவில் உள்ள வால்வுகளை ஒவ்வொரு ஆண்டும் பரிசோதனை செய்யப்பட வேண்டும். அதன் அடிப்படையில் இந்த ஆண்டு ‘வால்வு’களை பரிசோதனை செய்வதற்காக மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. விரைவில் ‘வால்வு’ பரிசோதனைகள் முடிந்து மீண்டும் மின் உற்பத்தி தொடங்கும் என்று உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
முதல் அணு உலையில் இருந்து வழக்கம் போல் 1000 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. அங்கிருந்து தமிழகத்துக்கு 560 மெகாவாட் மின்சாரம் வழங்கப்படுகிறது. இது போல கூடங்குளத்தில் 3, 4-வது அணு உலைகள் கட்டு மானபணிகளும் தொடர்ந்து நடந்து வருகின்றன. #tamilnews