திருச்செந்தூர்:
ஆறுமுகநேரி துணை மின் நிலையத்தில் இன்று நடைபெறுவதாக இருந்த அவசரகால பராமரிப்பு பணிகள் நாளை (26-ந் தேதி) நடைபெற உள்ளது.
எனவே அங்கிருந்து மின் வினியோகம் பெறும் புன்னக்காயல், ஆத்தூர், பேயன்விளை, காயல்பட்டினம், வீரபாண்டியன்பட்டினம், தளவாய்புரம், திருச்செந்தூர், சங்கிவிளை, கானம், வள்ளிவிளை, குரும்பூர், நல்லூர், அம்மன்புரம், பூச்சிக்காடு, கானம் கஸ்பா, காயாமொழி, நாலுமாவடி, தென்திருப்பேரை, வீரமாணிக்கம், குட்டித்தோட்டம், குரங்கணி, தேமான்குளம், திருக்கோளூர் ஆகிய பகுதிகளில் நாளை காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது.
இந்த தகவலை திருச்செந்தூர் கோட்ட மின் வினியோக செயற்பொறியாளர் பிரபாகர் தெரிவித்து உள்ளார்.