செய்திகள்

மாற்றுதிறனாளிகளுக்கான மருத்துவ பட்ட மேற்படிப்பு ‘கவுன்சிலிங்’ தொடங்கியது

மாற்றுதிறனாளிகளுக்கான மருத்துவ பட்ட மேற்படிப்பு ‘கவுன்சிலிங்’ தொடங்கியது. பல்வேறு பகுதிகளில் இருந்து டாக்டர்கள் இதில் கலந்து கொள்ள பெற்றோர்களுடன் வந்திருந்தனர்.

சென்னை:

தமிழகத்தில் மருத்துவ பட்ட மேற்படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கு இருந்து வந்த 50 சதவீத இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டது.

‘நீட்’ நுழைவுத் தேர்வு அடிப்படையில் இடஒதுக்கீடு பின்பற்ற வேண்டும் எனவும், இந்த விவகாரத்தில் இந்திய மருத்துவ கவுன்சில் விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் எனவும் கோர்ட்டு உத்தரவிட்டது.

இதன் அடிப்படையில் மருத்துவ பட்ட மேற்படிப் பிற்கான தரவரிசை பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. அரசு மற்றும் சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்கள் நிரப்பப்படுகின்றன. இதற்கான கலந்தாய்வு சென்னை அரசு பல்நோக்கு மருத்துவமனை வளாகத்தில் இன்று தொடங்கியது.

முதல் நாளான இன்று மாற்றுதிறனாளிகளுக்கான கலந்தாய்வு நடந்தது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து டாக்டர்கள் இதில் கலந்து கொள்ள பெற்றோர்களுடன் வந்திருந்தனர்.

நாளை (9-ந்தேதி) முதல் பொது கலந்தாய்வு நடை பெறுகிறது.