செய்திகள்

தமிழக மீனவர்கள் பிரச்சினைக்கு நிச்சயம் தீர்வு கிடைக்கும்: பொன்.ராதாகிருஷ்ணன்

மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண மிகப்பெரிய திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி தீட்டியுள்ளார் என்று மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் கூறினார்.

மாலை மலர்

தூத்துக்குடி:

மத்திய கப்பல் துறை இணை மந்திரி பொன்ராதாகிருஷ்ணன் தூத்துக்குடி விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழக மீனவர்களை தொடர்ந்து இலங்கை கடற்படை கைது செய்வது வேதனை தரக்கூடிய வி‌ஷயம். அதனை ஏற்றுக்கொள்ள முடியாது. இதற்கு நிரந்தர தீர்வு காண மிகப்பெரிய திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி தீட்டியுள்ளார். மீனவர்கள் பிரச்சினைக்கு நிச்சயம் தீர்வு கிடைக்கும்.

இலங்கை கடற்படை தங்களது நடவடிக்கையை முடக்கி வைக்க வேண்டும். இலங்கை அரசுக்கு மத்திய அரசு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறது.

இவ்வாறு மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.