தீ 
செய்திகள்

பொன்னேரி அருகே கடையில் தீ விபத்து

பொன்னேரி அருகே கடையில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பொன்னேரி:

பொன்னேரியை அடுத்த காஞ்சிவாயல் கிராமத்தைச் சேர்ந்தவர் தனவேல் (32). இதே பகுதியில் பெட்டிக்கடை வைத்து நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு மின்சாரம் நிறுத்தப்பட்டு மீண்டும் வந்த போது மீட்டர் பெட்டி வெடித்து சிதறி கடை முழுவதும் தீப்பற்றியது தகவலின் பேரில் தீயணைப் புத்துறையினர் வந்து மேலும் பரவாமல் அணைத்தனர்.

இதில் பேனா, பென்சில், நோட்டு புத்தகங்கள், கிரைண்டர், குளிர் சாதனப் பெட்டி, மளிகைப் பொருட்கள் முழுவதும் எரிந்து சாம்பலானது.

SCROLL FOR NEXT