மூதாட்டி பலி 
செய்திகள்

பொங்கலூர் அருகே கிணற்றில் தவறி விழுந்து மூதாட்டி பலி

பொங்கலூர் அருகே கிணற்றில் தவறி விழுந்து மூதாட்டி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பொங்கலூர்:

பொங்கலூர் அருகே உள்ள சேமலைக்கவுண்டம்பாளையத்தை சேர்ந்தவர் கண்ணம்மாள்.(வயது 70).பார்வை குறைபாடு காரணமாக பாதிக்கப்பட்டிருந்த கண்ணம்மாள் நேற்று அவரது வீட்டின் அருகே உள்ள கிணற்று பக்கம் சென்றுள்ளார். இதில் எதிர்பாராத விதமாக தவறி கிணற்றுக்குள் விழுந்ததால் பரிதாபமாக உயிரிழந்தார். அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து அவினாசிபாளையம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கண்ணமாளின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பல்லடம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகிறார்கள்.