மண்பாண்டத் தொழில் செய்யும் தொழிலாளர்கள் மண்பானைகளை காயவைக்கும் போது எடுத்த படம். 
செய்திகள்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பேராவூரணியில் மண் பானைகள் தயாரிக்கும் பணி மும்முரம்

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி பகுதியில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மண் பாண்டங்கள் தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.

மாலை மலர்

பேராவூரணி:

தமிழகத்தில் பொங்கல் பண்டிகை தமிழகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்படும். பொங்கல் பண்டிகையை தமிழர்கள் அதிக முக்கியத்துவுடன் கொண்டாடுவது வழக்கம். இந்த நாளில் குடும்பத்தில் அனைத்து உறுப்பினர்களும் ஒன்றுகூடி மண்பாண்டங்களில் புத்தரிசி போட்டு ஆதவன் முன்னே அடுப்பில் பொங்கி இப்பண்டிகையை சிறப்பாக கொண்டாடுவார்கள்.

கடந்த ஏழு வருடங்களாக பருவமழை சரியாக பெய் யாத்தால் விவசாயிகளின் வாழ்க்கை கேள்விக்குறியாக இருந்து வந்த்தது. இந்தாண்டு பருவமழையும், காவிரி கடைமடை பகுதிகளுக்கு காவிரி ஆறும் முழுமையாக கைகொடுத்தது, அதனால் இந்த ஆண்டு முழு வீச்சில் விவசாயிகள் இறங்கி பல லட்சம் ஏக்கரில் நெற் பயிர்கள் விவசாயம் செய்துள்ளனர். கடந்த ஏழு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு பொங்கல் பண்டிகை மிகச் சிறப்பாக இருக்கும் என எதிர்பார்க்கபடுகிறது.

விவசாயிகளின் வியர்வையில் பயிராகி அறுவடை செய்யப்பட்டு நெல்லை உரலிட்டு கைகுத்தலாக்கி சேகரிக்கப்படும் அரிசியை இந்த பொங்கல் நாளில் சூரியனுக்கு படைக்கப்படும். பால் நிறைந்த புத்தரிசியை மண்பானையில் இட்டு வெல்லம், நெய், கலந்து பொங்கி இந்த நாளில் படையலிட்டு பகிர்ந்து உண்ணுவது வழக்கம்.

பொங்கல் பண்டிகை நாளில் பயன்படுத்தப்படும் மண் பானைகள் மண் சட்டிகள், மண் அடுப்புகள், தமிழகம் முழுவதும் உள்ள மண்பாண்ட தொழிலாளர்கள் தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு வந்த வண்ணம் உள்ளது. தஞ்சை மாவட்டத்தில் பேராவூரணியில் வருகிற பொங்கல் பண்டிகைக்காக மண் பாண்டங்கள் தயாரிக்கும் பணி விறுவிறுப்பான நிலையில் உள்ளது.

பேராவூரணி பகுதியில் நீலகண்டபுரத்தில் மண்பாண்டம் செய்யும் தொழிலாளர்கள் (குலாலர்) மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் வசித்து வருகிறார்கள். இவர்களின் முக்கியத் தொழிலான மண் பாண்டங்கள் தயாரிக்கும் தொழிலாகும், இப்பகுதிகளில் குடிசை தொழிலாகவும் உள்ளது.

நீலகண்டபுரத்தில் தயாரிக்கப்படும் மண்பானைகள், மண்அடுப்புகள், மண் சட்டிகள், மண்மூடிகள், கறிச்சட்டி கள், மடக்குமூடி, மூக்குசட்டி, பூந்தொட்டி, மண்கூஜா, குவளை, பூச்சாடி, மண் உண்டியல், இரட்டை அடுப்பு, ஒற்றைக்கல்அடுப்பு, குத்துவிளக்கு, கார்த்திகை தீப விளக்கு, மண்குதிரை, மதலை பொம்மை, விநாயகர் சிலை, ஆகியவை தயாரிக்கப்பட்டு வருகிறது.

இப்பகுதிகள் தயாரிக்கப்படும் பொருள்களை பேராவூரணி அறந்தாங்கி, பட்டுக்கோட்டை , ஆலத்தூர், திருச்சிற்றம்பலம், முத்துப்பேட்டை, அதிராம்பட்டினம், ஆவுடையார்கோவில், கறம்பக்குடி ஆகிய பகுதிகளுக்கு செய்யும் தொழிலாளர்களை கொண்டுசென்று ஒவ்வொரு வார சந்தையிலும், கோவில் திருவிழாக்களிலும், பொங்கல்பண்டிகையின் போது அனைத்து ஊர்க ளுக்கும் தனித்தை யாகதனித்தனியாக ஏற்றிச் சென்று வியாபாரம் செய்து வருகிறார்கள். மேலும் பிற பகுதியிலிருந்து கொள்முதல் செய்வதற்காக இப்பகுதிக்கு வரும் வியாபாரிகளுக்கு மொத்தமாகவும், சில்லறையாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

மண்பாண்ட தயாரிப்புக்கான முன்பெல்லாம் ஆறுகள், நீர் ஓடைகள், வாய்க்கால், பகுதிகளில் உள்ள களிமண்கள் சேகரிக் கப்பட்டு அங்கிருந்து எடுத்து வந்து மண்பாண்டங்களை தயாரித்து வந்தனர், ஆனால் தற்போது இவை அனைத்தும் ஆக்கிரமிப்பில் அடைபட்டு விட்டதால் விலை கொடுத்து வாங்கும் நிலை உள்ளது.

மண்பாண்ட தயாரிப்பின் முக்கிய அம்சமாக விளங்கும் "திருகுசக்கரம்" வாயிலா கவே மண்பாண்டங்களை தயாரிக்கப்படுகின்றன. பொங்கலுக்கான பானை கள், சட்டி அவற்றுடன் தண்ணீர்குடம், சிறு கலையம், அகல்விளக்கு, முகூர்த் தப்பானை, பூந்தொட்டிகள் என பல்வேறு வகையான பொருட்களை தொழிலாளர்கள் தயாரித்து வருகின்றனர். மண் பாண்டத்தில் சமைப்பதும், மண் பானைசோறு ஆரோக்கியத்தை தரும் என்பதால் கிராம குடியிருப்பு பகுதிகளில் பலவற்றில் இன்றளவும் மண்பாண்ட பயன்பாடு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஆனால் நகர்ப்பகுதியில் உலோக பயன்பாடு இருந்தாலும் கூட பொங்கல் நாளில் மண்பாண்டங்களை தேடிப்பிடித்து வாங்கி அதில் பொங்கலிட்டு வருகிறார்கள்.

இத்தனை சிறப்புமிக்க மண் பாண்டத்தில் சமைக்கும் உணவுகள், அருந்தும்நீர்கள் மிகவும் சுவையாகவும் இருப்பதால் அதில் சமைத்து உண்பவர்கள் இதை தேடிப்பிடித்து ஒவ்வொரு வருடமும் பயன்படுத்தி வருகிறார்கள். ஆனால் மண்பாண்டங்களின் தயாரிக்கும் தொழிலாளர்கள் இந்த தொழிலால் லாபம் கிடைக்காமல் செய்யும் தொழில் தெய்வம் எனக் கருதி பரம்பரை பரம்பரையாக இந்த தொழிலை நடத்தி வருகிறார்கள். தொழிலை விடவும் மனமில்லை தொழிலால் லாபம் இல்லை என கவலையுடன் தெரிவிக்கிறார்கள்.

இதுகுறித்து மண்பாண்ட தொழிலாளர்கள் நீலகண்டன் சங்கரன் (60), ராமமூர்த்தி சங்கரன் (50), முருகேசன் சங்கரன் (40) ஆகியோர் கூறியபோது பானைகள், சட்டி மண் மூடிகள் தயாரிப்புக்கான மண் அருகேயுள்ள ஆதனூர் பெரிய ஏரியில் எடுக்கப்பட்டு வந்தது. தற்போது ஒரு மாட்டு வண்டியின் விலை 1000 ரூபாய் கொடுத்து வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இவற்றை நீர்விட்டு நனைத்து, குலைத்து, புளிக்க வைத்து, உருப்படிகள் தயாரிக்கப்படுகிறது. மேலும் இவற்றில் செம்மண் கலவை பூசி சூளையில் அடிக்கவேண்டும் இதற்கு தேவையான மட்டை, வைக்கோல். விலையும் அதிகரித்து விட்டது.

இதனால் பலர் இத்தொழிலை விட்டு விட்டு மாற்று தொழிலுக்கு சென்று விட்டனர். ஆனால் பெரும்பாலானோர் பாரம்பரியமான இத்தொழிலை கைவிட மனமில்லாமல் தொடர்ந்து செய்து வருகிறோம். இத்தொழிலிலை குடும்பத்தின் உள்ள அனைத்து உறுப்பினர்களும் செய்து வருகிறோம் தொழிலாளர்களுக்கு சம்பளம் கொடுக்கும் அளவிற்கு இதில் லாபம் கிடைக்கவில்லை.

தற்போது இங்கு தயாரிக்கும் பொருட்களில் வியாபாரிகளுக்கு பானை ரூ. 40 சட்டி ரூ.20க்கும் கொடுக்கிறோம். விநாயகர் சிலை ஒரு அடி ரூ.1000க்கு என விற்று வருகிறோம்.

இப்பொருள்களின் விலை கை மாறுகையில் விலையும் இரட்டிப்பாகி உள்ளது. ஆனால் பொங்கல் நாளில் விலையை பற்றி கவலைப்படாமல் மக்கள் இவற்றை வாங்கி மண்பாண்ட தொழிலுக்கு ஆதரவளித்து எங்களின் தொழிலை நலிவடையச் செய்யாமல் மீண்டும் புத்துணர்ச்சி அடைய கேட்டுக்கொள்கிறோம் என்றனர்.