புதுச்சேரி:
புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி கடந்த காலங்களில் வட மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியின் மேலிட பொறுப்பாளராக பதவி வகித்து வந்தார்.
அந்த மாநிலங்களில் தேர்தலின்போது வேட்பாளர்களை தேர்வு செய்வது, பிரசாரம் மேற்கொள்வது போன்ற பணிகளை செய்து வந்தார். புதுவை முதல்-அமைச்சராக பதவியேற்ற பின் அவரால் அகில இந்திய அளவில் கட்சிப் பணிகளில் கவனம் செலுத்த முடியாமல் போனது.
இந்த சூழ்நிலையில் மேகாலயா உள்ளிட்ட 4 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது.
இங்கு தேர்தல் பணிகளை கவனிக்க முதல்-அமைச்சர் நாராயணசாமியை கட்சி மேலிடம் கேட்டுக்கொண்டதாக கூறப்படுகிறது.
இதைத்தொடர்ந்து அவர் நேற்று புதுவையில் இருந்து மேகாலயாவுக்கு புறப்பட்டுச் சென்றார். அவர் நாளை (செவ்வாய்க்கிழமை) வரை மேகாலயாவில் தேர்தல் பணிகளை மேற்கொள்ள உள்ளார். அதன் பின்னர் அவர் புதுவை திரும்புகிறார். #tamilnews