செய்திகள்

கல்விக்கடன், விவசாயக் கடன்களை திமுக-காங்கிரஸ் எம்பிக்கள் செலுத்த வேண்டும்- பொன்.ராதாகிருஷ்ணன்

தமிழகத்தில் கல்விக்கடன் மற்றும் விவசாயக் கடன்களை திமுக-காங்கிரஸ் எம்பிக்கள் செலுத்த வேண்டும் என முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

மாலை மலர்

முன்னாள் மத்திய இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன்  திருச்சி விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட திமுக மற்றும் காங்கிரஸ் எம்பிக்கள் 37 பேரும் தங்கள் சொத்துக்களை விற்று தமிழகத்தின் குடிநீர் பிரச்சினையை தீர்க்க வேண்டும். தமிழகத்தில் கல்விக் கடன் மற்றும் விவசாயக் கடன்களை 37 எம்.பி.க்களும்  செலுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.