சென்னை ஐகோர்ட் 
செய்திகள்

பணி நீட்டிப்பு கோரி பொன்.மாணிக்கவேல் சென்னை ஐகோர்ட்டில் மனு

சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரியான பொன்.மாணிக்கவேல், பணி நீட்டிப்பு கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று மனுதாக்கல் செய்துள்ளார்.

மாலை மலர்

சென்னை:

சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரியாக பதவி வகித்து வருபவர் பொன்.மாணிக்கவேல். இவரது பதவிக்காலம் வரும் 30-ம் தேதியுடன் நிறைவடைய உள்ளது.

இந்நிலையில், சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரியான பொன்.மாணிக்கவேல், பணி நீட்டிப்பு கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று மனுதாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், தனது பணிக்காலத்தை நீட்டிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். மேலும், தன்னை பணி செய்யவிடவில்லை என அரசுக்கு எதிராக குற்றம் சாட்டியுள்ளார்.