செய்திகள்

மோடியுடன் அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி மைக் பாம்பியோ சந்திப்பு

அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்துள்ள அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி மைக் பாம்பியோ, இன்று டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார்.

மாலை மலர்

இந்தியா- அமெரிக்கா இடையேயான பொருளாதார உறவில் சில கசப்புணர்வுகள் சமீப காலமாக அதிகரித்துள்ள நிலையில் அமெரிக்கா வெளியுறவுத்துறை மந்திரி மைக் பாம்பியோ இந்தியாவுக்கு வந்துள்ளார்.
 

மூன்று நாள் பயணமாக இந்தியா வந்துள்ள மைக் பாம்பியோ, டெல்லியில் இன்று பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதற்கான பல்வேறு அம்சங்கள் குறித்து பேசினர்.