செய்திகள்

அணு ஆயுத ஒழிப்பு - அமெரிக்கா, வடகொரியா தலைவர்கள் இரண்டாவது சுற்றுப்பேச்சு வார்த்தைக்கு ஏற்பாடு

அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி மைக் பாம்ப்பியோ மற்றும் வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன் இடையே இன்று சந்திப்பு நடைபெற்றதை அடுத்து, ட்ரம்ப் உடனான 2-வது கட்ட பேச்சுவார்த்தை விரைவில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. #MikePompeo #KimJongUn #NorthKorea #US

மாலை மலர்

ஜப்பான், வடகொரியா, சீனா உள்ளிட்ட  தெற்காசிய நாடுகளில் அமெரிக்க வெளியுறத்துறை மந்திரி மைக் பாம்ப்பியோ சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.

வடகொரியா-அமெரிக்கா இடையில் சமீபத்தில் சிங்கப்பூரில் செய்யப்பட்ட அணு ஆயுத ஒழிப்பு ஒப்பந்தத்தை முழுமையாக நிறைவேற்றுவது தொடர்பாக  வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன்-னை வலியுறுத்துவது அவரது பயணத்தின் அதிமுக்கிய நோக்கமாக உள்ளது.

இதையடுத்து இன்று காலை வடகொரிய தலைநகர் பியாங்யோங்கில் அதிபர் கிம் ஜாங் அன் மற்றும் அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி மைக் பாம்ப்பியோ இடையேயான சந்திப்பு நடைபெற்றது. சுமார் 2 மணி நேரம் வரை இந்த சந்திப்பு நடைபெற்றது.