வாக்குச்சாவடியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள ராணுவ வீரர்கள் 
செய்திகள்

ஆப்கானிஸ்தானில் அதிபர் தேர்தல்- பலத்த பாதுகாப்புடன் வாக்குப்பதிவு

ஆப்கானிஸ்தானில் அதிபர் பதவிக்கான தேர்தல் இன்று நடைபெறுகிறது. பலத்த பாதுகாப்புடன் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

மாலை மலர்

ஆப்கானிஸ்தான் நாட்டின் தற்போதைய அதிபர் அஷ்ரப் கானியின் பதவிக்காலம் முடிவடைந்ததையடுத்து, புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இன்று நடைபெறுகிறது. இன்று காலை அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்குப்பதிவு தொடங்கியது. பொதுமக்கள் காலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களிக்கின்றனர்.

தேர்தல் பிரச்சாரத்தின்போது பல்வேறு இடங்களில் வன்முறைத் தாக்குதல்கள் நடைபெற்றதால் வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் அமைதியாக வாக்குப்பதிவு நடைபெற்று வருவதாகவும், வாக்காளர்கள் ஆர்வத்துடன் வாக்களிப்பது மகிழ்ச்சியாக இருப்பதாகவும் தேர்தல் ஆணைய செய்தித் தொடர்பாளர் குறிப்பிட்டுள்ளார்.

ஆப்கானிஸ்தானில் அதிபர் தேர்தல் இரண்டு சுற்றுகளாக நடைபெறும். முதல் சுற்றில் எந்த வேட்பாளருக்கும் மெஜாரிட்டி கிடைக்காவிட்டால், முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் வேட்பாளர்களுக்கு இடையே மீண்டும் போட்டி நடைபெறும்.