தாய்ப்பால் புகட்டும் அறை, விளையாட்டு பொருட்கள், முதலுதவி வசதியுடன் பாட்னாவில் வாக்குச்சாவடி
பாராளுமன்றத்துக்கு நாளை நடைபெறும் வாக்குப்பதிவுக்கு மக்களை ஈர்க்கும் வகையில் பீகார் தலைநகர் பாட்னாவில் தாய்ப்பால் புகட்டும் அறை, விளையாட்டு பொருட்கள், முதலுதவி வசதியுடன் வாக்குச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது.
மாலை மலர்
7 கட்டங்களாக நடைபெற்று வரும் பாராளுமன்ற தேர்தலில் இதுவரை 6 கட்ட தேர்தல்கள் நிறைவடைந்து உள்ளன. இறுதியாக 7-ம் கட்ட தேர்தல் நாளை 19-ம் தேதி நடைபெற உள்ளது. 8 மாநிலங்களில் உள்ள 59 தொகுதிகளுக்கு நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.