செய்திகள்

கேரளாவில் தொடரும் அரசியல் கொலைகள்: தேசிய மனித உரிமை கமி‌ஷன் விசாரணை

கேரளாவில் தொடரும் அரசியல் கொலைகள் பற்றி தாமாக முன்வந்து விசாரிக்க போவதாக தேசிய மனித உரிமைகமி‌ஷன் அறிவித்துள்ளது.

மாலை மலர்

திருவனந்தபுரம்:

கேரளாவில் சமீபகாலமாக அரசியல் கட்சிகள் இடையே மோதல் ஏற்பட்டு கொலையில் முடியும் சம்பவங்கள் அதிகரித்து உள்ளது.

இந்த அரசியல் கொலைகள் பற்றி தாமாக முன்வந்து விசாரிக்க போவதாக தேசிய மனித உரிமைகமி‌ஷன் அறிவித்துள்ளது. அரசியல் கொலைகள் தொடர்பான தவல்களை 4 வாரத்திற்குள் அறிக்கையாக தாக்கல் செய்யும்படி கேரள அரசு தலைமை செயலாளர், டி.ஜி.பி. ஆகியோருக்கு தேசிய மனித உரிமை கமி‌ஷன் நோட்டீசும் அனுப்பி உள்ளது.

ஏற்கனவே தேசிய மனித உரிமை கமி‌ஷனில் பா.ஜனதா கேரள மாநில தலைவர் கும்மணம் ராஜசேகரன் மனு தாக்கல் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.