கோப்புப் படம். 
செய்திகள்

திருச்சுழி அருகே போலீஸ்காரர் மனைவியின் ஸ்கூட்டர் தீ வைத்து எரிப்பு

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே போலீஸ்காரர் மனைவியின் ஸ்கூட்டரை மர்ம நபர்கள் தீ வைத்து எரித்தனர்.

மாலை மலர்

விருதுநகர்:

விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அருகே உள்ள நார்த்தம்பட்டியைச் சேர்ந்தவர் ரமேஷ். இவர் காரியாபட்டி போலீஸ் நிலையத்தில் காவலராக உள்ளார்.

இவரது மனைவி சுஜாதா (வயது 32). பள்ளி ஆசிரியை. இவர் தனது ஸ்கூட்டியை வீட்டு முன்பு நிறுத்தி இருந்தார்.

இந்த நிலையில் அந்த வாகனத்திற்கு யாரோ நள்ளிரவில் தீ வைத்து விட்டனர். இதில் ஸ்கூட்டி முற்றிலும் எரிந்து நாசமானது.

இது குறித்து எம்.ரெட்டிய பட்டி போலீசில் சுஜாதா புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து இருசக்கர வாகனத்திற்கு தீ வைத்த மர்ம நபர்கள் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.