தற்கொலை 
செய்திகள்

ஆன்லைனில் ரம்மி விளையாடிய காவலர் தற்கொலை

திருச்சியில் கடன் வாங்கி ஆன்லைனில் ரம்மி விளையாடிய ஜீயபுரம் காவல் நிலைய காவலர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாலை மலர்

திருச்சி:

திருச்சியில் கடன் வாங்கி ஆன்லைனில் ரம்மி விளையாடிய ஜீயபுரம் காவல் நிலைய காவலர்  தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இன்று அதிகாலை மாட்டு கொட்டகைக்கு சென்ற ஆனந்தின் தந்தை மகன் தூக்கில் தொங்குவதைப் பார்த்து காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார்.

சக போலீசாரிடம் வாங்கிய கடனை திருப்பிதர முடியாமல் மன உளைச்சலில் இருந்த ஆனந்த் தற்கொலை செய்துகொண்டார் என தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.