செய்திகள்

தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தி கைதான 85 ஆயிரம் பேர் விடுவிப்பு - காவல்துறை

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி இன்று நடந்த முழு அடைப்பு போராட்டத்தில் கைதான 10 ஆயிரம் பெண்கள் உள்பட 85 ஆயிரம் பேர் விடுவிக்கப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது. #TNBandh

மாலை மலர்

காவிரி மேலாண்மை வாரியம் காலதாமதமின்றி அமைக்க மத்திய அரசை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் இன்று முழு அடைப்புப் போராட்டம் நடந்தது. கடைகள் அடைக்கப்பட்டிருந்த நிலையில் குறைவான அளவிலான பேருந்துகளே இயங்கின. மாநிலம் முழுவதும் தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சாலை மறியல், ரெயில் மறியல் போராட்டங்களை நடத்தினர்.

சென்னை கடற்கரை சாலையில் மறியல் நடத்திய ஸ்டாலின், திருமாவளவன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர். இந்நிலையில், மாநிலம் முழுவதும் 10 ஆயிரம் பெண்கள் உள்பட 85 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.