செய்திகள்

மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து கைதான சீமான், பாரதிராஜா உள்ளிட்ட அனைவரும் விடுக்கப்பட்டனர்

பிரதமர் மோடிக்கு கருப்பு கொடி காட்டி கைதான சீமான், பாரதிராஜா, அமீர் உள்ளிட்ட அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

மாலை மலர்

சென்னை:

பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க இன்று சென்னை வருகை தந்த பிரதமர் மோடிக்கு தி.மு.க, காங்கிரஸ், சி.பி.ஐ, சி.பி.எம், நாம் தமிழர், த.வா.க, ம.ம.க, தி.க உள்ளிட்ட பல கட்சியினர் கருப்புகொடி காட்டி எதிர்ப்பு தெரிவித்தனர். சினிமா கலைஞர்களாக பாரதி ராஜா, அமீர், வெற்றி மாறன் ஆகியோரும் எதிர்ப்பு தெரிவித்து கைதாகினர்.

கைதான அனைவரும் பல்லாவரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் அடைக்கப்பட்டுள்ளனர். போராட்டங்களில் கைதாகும் அனைவரும் மாலை 6 மணிக்கு விடுவிக்கப்படுவார்கள். ஆனால், சீமானை தவிர மற்ற அனைவரும் விடுவிக்கப்பட்டனர். இதனால், சீமான் கைதாகலாம் என தகவல்கள் வெளியாகின.

சீமானை விடுவிக்காதவரை மண்டபத்தை விட்டு வெளியே செல்ல மாட்டேன் என பாரதிராஜா கூறினார். இந்நிலையில், சீமான், பாரதிராஜா, அமீர், தமிமுன் அன்சாரி உள்ளிட்ட அனைவரும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.