கைது 
செய்திகள்

சிவகாசியில் போலீஸ் ஏட்டுகள் மீது தாக்குதல்- 3 பேர் கைது

சிவகாசியில் குடிபோதையில் போலீஸ் ஏட்டுகளை தாக்கியதாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

விருதுநகர்:

சிவகாசி கிழக்கு போலீஸ் நிலையம் ஏட்டுகள் கருத்தப்பாண்டி, செல்வராஜ் இரவு ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். இன்று அதிகாலை அவர்கள் பணி முடித்து வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தனர்.

விருதுநகர்-தென்காசி சாலையில் சிவகாசி புதுமேடு பகுதியில் சென்றபோது, அங்கு 3 பேர் குடிபோதையில் அரசு பஸ்சை வழிமறித்து தகராறு செய்வதை பார்த்தனர். அதனை போலீஸ் ஏட்டுகள் 2 பேரும் விசாரித்து தகராறு செய்தவர்களை கண்டித்தனர்.

இதில் ஆத்திரமடைந்த 3 பேரும், ஏட்டுகள் கருத்தப்பாண்டி, செல்வராஜ் ஆகியோரை தாக்கிவிட்டு கொலை மிரட்டலும் விடுத்ததாக சிவகாசி கிழக்கு போலீசில் புகார் செய்யப்பட்டது.

இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி அருப்புக்கோட்டை சந்திரசேகர் (வயது 45), சுந்தரமூர்த்தி (32), சூரிய நாராயணன் (38) ஆகியோரை கைது செய்தனர்.

SCROLL FOR NEXT