செய்திகள்

அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் கொலையாளி அழகேசனிடம் போலீஸ் விசாரணை

கல்லூரி மாணவி அஸ்வினியை கொலை செய்த வாலிபர் அழகேசனிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாலை மலர்

சென்னை:

கல்லூரி மாணவி அஸ்வினியை கழுத்து அறுத்து கொலை செய்த வாலிபர் அழகேசன் பொதுமக்கள் தாக்கப்பட்டதில் படுகாயம் அடைந்தார். அவருக்கு அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

போலீஸ் பாதுகாப்புடன் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இரவு முழுவதும் உடலில் ‘குளுக்கோஸ்’ ஏற்றப்பட்டதை தொடர்ந்து இன்று காலையில் அழகேசன் தெளிவாக இருந்தான்.

அவனிடம் போலீசார் வாக்குமூலம் வாங்கி வருகின்றனர். அஸ்வினியை தான் உயிருக்கு உயிராய் காதலித்ததாகவும் அவளை செலவு செய்து படிக்க வைத்ததாகவும் போலீசாரிடம் தெரிவித்தான்.

மேலும் காதலுக்கு அஸ்வினியின் தாயார் எதிர்ப்பு தெரிவித்ததால்தான் அவள் தன்னிடம் இருந்து விலகி சென்றதாகவும் கூறியுள்ளார்.

அஸ்வினியை கொன்று விட்டு தானும் தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்ற முடிவில்தான் அழகேசன் அங்கு வந்துள்ளார்.

அவள் இல்லாத உலகத்தில் நான் வாழ விரும்பவில்லை, என்னையும் கொன்று விடுங்கள் என்று போலீசாரிடம் அழகேசன் இன்று கூறியுள்ளான்.

நான் மட்டும் தனியாக வாழ விரும்பவில்லை. எனக்கும் தண்டனை கொடுங்கள் என்று கண்ணீர் விட்டு கதறி அழுதார்.

ஆஸ்பத்திரியில் தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் அழகேசன் இருந்து வருகிறார். #tamilnews