செய்திகள்

கிரிக்கெட் வீரர் ஷமியின் வீட்டில் போலீசார் விசாரணை

மனைவி அளித்த புகாரின் அடிப்படையில், உத்தரப்பிரதேசத்தில் உள்ள கிரிக்கெட் வீரர் ஷமி வீட்டுக்கு சென்ற போலீசார் இன்று விசாரணை நடத்தினர். #MohammedShami

மாலை மலர்

புதுடெல்லி:

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி. அவர் மீது அவரது மனைவி ஹசின் ஜகான் பல்வேறு புகார்களை கூறி இருந்தார். கொடுமைப்படுத்தி, கொலை செய்ய முயற்சித்ததாக போலீசில் புகார் அளித்தார். தென் ஆப்பிரிக்க தொடர் முடிந்த பிறகு முகமது ஷமி துபாய் சென்று பாகிஸ்தானை சேர்ந்த பெண்ணை சந்தித்து சூதாட்டத்தில் ஈடுபட்டு இருக்கலாம் என்றும் அவர் குற்றம் சாட்டி இருந்தார். புகாரின் அடிப்படையில் கொல்கத்தா போலீசார் முகமது ‌ஷமி மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில்,  உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள அம்ரோஹா பகுதியில் உள்ள ஷமியின் வீட்டுக்கு போலீசார் இன்று சென்றனர். மனைவி கொடுத்த புகாரின் அடிப்படையில் அவரிடம் விசாரணை நடத்தினார்கள். விசாரணை விவரங்களை வெளியிட போலீசார் மறுத்து விட்டனர்.  #MohammedShami #Tamilnews