துப்பாக்கிச் சூடு 
செய்திகள்

கோவில்பட்டியில் பரபரப்பு - பிரபல ரவுடி மாணிக்கராஜ் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் பிரபல ரவுடி மாணிக்கராஜ் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.

தூத்துக்குடி:

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் பிரபல ரவுடி மாணிக்கராஜை மடக்கிப் பிடிக்க போலீசார் முயன்றனர். அப்போது போலீசாரை வாளை கொண்டு தாக்க முயன்ற பிரபல ரவுடி மாணிக்கராஜாவின் காலில் துப்பாக்கியால் சுட்டனர். 

இதில் மாணிக்கராஜா காயமடைந்தார். காயமடைந்த அவர் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ரவுடி மாணிக்கராஜ் மீது 4 கொலை வழக்குகள் உள்பட 40 வழக்குகள் உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். விசாரணையில் போலீசார் தற்காப்புக்காக துப்பாக்கியால் சுட்டதாக தெரிவித்தனர்.