எஸ்வி சேகர் 
செய்திகள்

நித்யானந்தாவுக்கு ஆதரவு- எஸ்.வி.சேகர் மீது கமி‌ஷனர் அலுவலகத்தில் புகார்

நித்யானந்தாவை காப்பாற்ற நினைக்கும் எஸ்வி சேகர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை:

நடிகர் எஸ்.வி.சேகர் மீது சென்னை போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்தில் இந்து யுவ வாகினி தலைவர் செல்வம் ஒரு புகார் கொடுத்துள்ளார். அந்த மனுவில் கூறி இருப்பதாவது:-

தொடர்ச்சியாக பிரபல போலி சாமியார் நித்யானந்தா இந்து கடவுள்களை இழிவுப்படுத்தியும், இவர் தான் கடவுள் போலவும், வெளிநாட்டு நபர்களையும், உள்நாட்டு நபர்களையும் பணம் மோசடி செய்து வருகிறார்.

இது சம்பந்தமாக நேற்று எஸ்.வி.சேகர் பிரபல போலி சாமியாருக்கு உறுதுணையாக ஊடகங்களை திசை திருப்புகிறார். பிரபல போலி சாமியாரை பிடிக்க வேண்டும் என்றால் எஸ்.வி.சேகரை கைது செய்ய வேண்டும்.

நித்யானந்தாவிடம் பணம் வாங்கி போலி சாமியாரை மீட்க பாடுபடுகிறார் என்று எங்களுக்கு இவர் மீது சந்தேகம் உள்ளது. பிரபல போலி சாமியாரையும், எஸ்.வி.சேகரையும் கைது செய்ய கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT