பாஜக மாநில தலைவர் எல் முருகன் 
செய்திகள்

தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் மீது போலீசார் வழக்குப்பதிவு

தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் மீது தியாகதுருகம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மாலை மலர்

கள்ளக்குறிச்சி:

பாஜக மாவட்ட அலுவலக திறப்பு விழாவில் பங்கேற்ற எல்.முருகன் உள்பட 250 பேர் மீது கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

தியாகதுருகத்தில் எல்.முருகனுக்கு வரவேற்பும் கள்ளக்குறிச்சியில் பாஜக அலுவலக திறப்பும் நடந்தது.

144 தடை உத்தரவை மீறி 100க்கும் மேற்பட்டோர் ஒன்று கூடியது உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.