செய்திகள்

கதிராமங்கலத்தில் போலீஸ் தடியடி: தமிழ் அமைப்புகள் கண்டன ஆர்ப்பாட்டம்

கதிராமங்கலத்தில் ஓ.என். ஜி.சி. எண்ணெய் குழாய் பதிப்பதை தடுத்த பொதுமக்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். அதை கண்டித்து சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

சென்னை:

கதிராமங்கலத்தில் ஓ.என். ஜி.சி. எண்ணெய் குழாய் பதிப்பதை தடுத்த பொதுமக்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். அதை கண்டித்து சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அதில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், தமிழர் வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான், மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, தெகலான் பார்கவி, கதிராமங்கலம் போராட்டக்குழு, நெடுவாசல் போராட்டக் குழுவினர் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தடியடி நடத்திய போலீசாரை கண்டித்து கோ‌ஷங்கள் எழுப்பினார்கள்.