கோப்பு படம் 
செய்திகள்

கிருஷ்ணராயபுரம் அருகே விஷம் குடித்த சலூன் கடைக்காரர் உயிரிழப்பு

கிருஷ்ணராயபுரம் அருகே கடன் தொல்லையால் அவதிப்பட்டு வந்த சலூன் கடைக்காரர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

மாலை மலர்

கரூர்:

கிருஷ்ணராயபுரம் அருகே உள்ள லட்சுமண பட்டியைச் சேர்ந்தவர் பழனிவேல் (வயது 35). இவர் கரூர் ராமகிருஷ்ண புரத்தில் சலூன் கடை நடத்தி வந்தார். இவருக்கு கோமதி என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். இவர் சலூன் கடையை விரிவுபடுத்துவதற்காக பல்வேறு இடங்களில் கடன் வாங்கி இருந்ததாக கூறப்படுகிறது. ஆனால், கடனை திருப்பி செலுத்த முடியாமல் தவித்து வந்துள்ளார். 

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு செங்குந்தபுரம் ரெயில் ரோடு அருகே பழனிவேல் விஷத்தை குடித்து விட்டு மயங்கி கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த உறவினர்கள் அவரை மீட்டு கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று முன்தினம் பரிதாபமாக பழனிவேல் உயிரிழந்தார். 

இதுகுறித்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கஸ்தூரி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.